ஆந்திர பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து: பல ரயில்கள் தாமதம்
ஆந்திர பிரதேசத்தில் எஸ்வந்த்பூர் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த எஸ்வந்த்பூர் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவில் ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் (பேண்ட்ரி காரில்) இந்த விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயில் ஊழியர்கள் தனியாக கழற்றி விட்டனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்தில், ரயிலின் பேண்ட்ரி கார் முழுவதும் எரிந்து நாசமானது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்த ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூருக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாக செல்லும் ரயில்கள் தாமதம் ஆனது.
Related Tags :
Next Story