எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 6 March 2019 12:27 PM IST (Updated: 6 March 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

ஸ்ரீநகர், 

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து தற்போது சற்று தணிந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கடந்த சில தினங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராஜோரி செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. 

Next Story