“குற்றம் சாட்டுவதற்கு பதிலாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட எங்களுக்கு உதவுங்கள்,” -பாகிஸ்தான்
“குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட எங்களுக்கு உதவுங்கள்,” என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. ஆனால் அவ்வமைப்பு பொறுப்பு ஏற்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். மேலும் முகமது அசாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்போது ஜெய்ஷ் எங்கள் நாட்டில் அதிகாரப்பூர்வமாக செயல்படவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். காஷ்மீரில் நிலைத்தன்மையை அழிக்கும் வகையில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார். அப்போது, நடவடிக்கை எடுப்போம். பிற நாடுகளுக்கு எதிராக எங்கள் நாட்டில் செயல்படும் யார் மீதும் நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாத செயல்பாடு பாகிஸ்தானின் நலனில் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். குற்றம் சாட்டுவதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் இதுபோன்ற இயக்கங்களுக்கு எதிராக போரிட எங்களுக்கு உதவவேண்டும் என்றார்.
"ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் [அதிகாரப்பூர்வமாக] செயல்படவில்லை," என வலியுறுத்தியுள்ள காபூர், "இவ்வமைப்பு பாகிஸ்தானாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் தடை செய்யப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் சில பயங்கரவாதிகளை கைது செய்ததாக கூறுகிறது. 2009 மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை. பாகிஸ்தான் கூற்றை நம்புவது கேள்விக்குரியானது.
Related Tags :
Next Story