யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி


யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது. அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் என ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ரபேல் ஆவணங்களை வெளியிட்டது பற்றி ‘இந்து’ வெளியீட்டு குழும தலைவர் என்.ராம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகமான ஆவணங்கள். இந்த விவரங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது. எனவே, பொதுநலன் கருதி அவற்றை வெளியிட்டோம்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இவற்றை திருட்டு ஆவணங்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஆவணங்களை ரகசிய வட்டாரங்களிடம் இருந்து பெற்றோம். அந்த வட்டாரங்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்திருப்பதால், அவர்களை பற்றிய எந்த தகவலையும் யாருக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு என்.ராம் கூறினார்.


Next Story