நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் - ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் முடிவு


நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் - ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் வழங்குவது என ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாட்னா,

ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

இறுதியில் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை இறுதி செய்ய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கும் அவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது.

கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நல கோளாறுக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story