லண்டனில் இருப்பது தெரியும்: நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை - மத்திய அரசு தகவல்


லண்டனில் இருப்பது தெரியும்: நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 9 March 2019 10:15 PM GMT (Updated: 9 March 2019 9:05 PM GMT)

லண்டனில் இருப்பது தெரியும் என்றும் நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளி நிரவ் மோடி லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

ஆனால் நிரவ் மோடியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ‘நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் லண்டனில் இருப்பது தெரிந்ததால்தான் இவ்வாறு வேண்டுகோள் விடுக்க முடியும். இல்லாவிட்டால் அவர்களிடம் கேட்க முடியாது’ என்று கூறினார்.

நிரவ்மோடியை லண்டனில் பார்த்ததால், உடனே அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறிய ரவீஷ் குமார், அதற்கான நடைமுறைகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், அது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story