ஜம்மு: சாலையில் புதைத்து வைத்த கண்ணிவெடி - தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு


ஜம்மு: சாலையில் புதைத்து வைத்த கண்ணிவெடி - தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 9:26 PM GMT)

ஜம்முவில், சாலையில் புதைத்து வைத்த கண்ணிவெடியினை தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் அஹ்னூர் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நந்த்வால் சவுக், கவுர்-பல்லன்வாலா சாலையில் நேற்று காலை 10.55 மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் சந்தேகப்படும்படியாக ஒரு பொருள் இருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்தனர்.

அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி அந்த பொருளை ஆய்வு செய்ததில் அது கண்ணிவெடி என்று தெரிந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்கச் செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளிலும் போலீசார் வேறு ஏதும் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி வருகிறார்கள். போலீசார் சரியான நேரத்தில் இதனை கண்டுபிடித்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Next Story