“தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாது” - பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
“காலமெல்லாம் பயங்கரவாத தாக்குதல்களை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
காசியாபாத்,
சி.ஐ.எஸ்..எப். என்று அழைக்கப்படுகிற மத்திய தொழிற்பாதுகாப்பு படை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி உருவாக்கப்பட்டது. 2 ஆயிரத்து 800 பேருடன் உருவாக்கப்பட்ட இந்த படை இப்போது சுமார் 1½ லட்சம் பேருடன் செயல்படுகிறது.
இந்த படை உருவாக்கப்பட்டதின் 50-வது ஆண்டு பொன் விழா, உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிற வகையில் ஆவேசமாக பேசினார்.
அவர் புல்வாமா, உரி ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நினைவு கூர்ந்து பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பயங்கரவாதத்தால் நாம் அனுபவித்தது போதும். போதும். காலமெல்லாம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பயங்கரவாதிகள் முகாம் களை நிர்மூலம் ஆக்கியதை மறைமுகமாக குறிப்பிடுகிற வகையில், “சில நேரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிறது” என குறிப்பிட்டார். .
பிரதமர் மோடி, பாகிஸ்தான் பற்றி பெயர் கூறாமல் குறிப்பிட்டார்.
அப்போது அவர் “அண்டை நாடு மிகவும் விரோதமானது. ஆனால் போரை நடத்துகிற திறமை இல்லாதது. உள்நாட்டுக்குள் சில சக்திகள் சதி செய்கின்றன. அந்த சக்திகளுக்கு எல்லைக்கு அப்பால் இருந்து உற்சாகம் கிடைக்கிறது. அத்தகைய ஒரு சூழலில், பயங்கரவாதத்தின் கோர முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பையும், நாட்டில் உள்ள அரசு அமைப்புகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகவும் சவாலாக அமைகிறது” என்று கூறினார்.
நாட்டின் முக்கிய அமைப்புகளின் பாதுகாப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் பங்களிப்பை பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டினார். இதுபற்றி அவர் கூறுகையில், “ தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எளிதானது. மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு, அணுமின்நிலையங்களுக்கு, விமான நிலையங்களுக்கு, துறைமுகங்களுக்கு, மின்நிலையங்களுக்கு, அரசு கட்டிடங்களுக்கு டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். தினமும் 30 லட்சம் பேர் வந்து போகிற நிறுவனத்துக்கு அல்லது தினமும் 8 லட்சம் பயணிகள் வந்துசெல்கிற நிறுவனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது எளிதானது அல்ல” என குறிப்பிட்டார்.
வி.ஐ.பி. கலாசாரம் சில நேரங்களில் பாதுகாப்புக்கு தடையை ஏற்படுத்தி விடுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.
“ஒழுக் கத்தை பின்பற்றுகிறவன் என்ற வகையிலே இதை நான் சொல்கிறேன். ஒழுக்கம் என்று வருகிறபோது எனது பதவி குறுக்கே வருவது இல்லை. ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன்இருப்பது கடமை ஆகிறது. குடிமக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதபோது, உங்களது (மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்) பணி கடுமையானதாகி விடுகிறது. மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் பொன் விழா ஆண்டில் மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பெண்கள் சேர்ந்திருப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி அவர்களுக்கும் தனது பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பெண்கள் இணைந்து பணியாற்றுவது புதிய திசையை காட்டுகிறது. இந்த மகள்கள், அவர்களது பெற்றோர், குறிப்பாக தங்கள் மகள்களை சீருடை அணிந்து, பாதுகாப்பு பொறுப்பை ஏற்க வைத்த தாய்மார்களை பாராட்டு கிறேன்” என்று குறிப்பிட்டார்.
முடிவாக, “மக்கள் தங்களது பாதுகாப்பு படையினரை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Related Tags :
Next Story