டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் -அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AravindKejriwal
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:–
கடந்த 70 ஆண்டுகளாக, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் டெல்லி நடத்தப்படுகிறது. டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,50,000 கோடி வரிப்பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ரூ.325 கோடி தான் செலவு செய்யப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, வேலைவாய்ப்பின்மை, புதிய பல்கலைக்கழகங்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டும் தான் முழுமையாக நிறைவேற்ற முடியும். எனவே, டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து பெறுவதே எங்கள் லட்சியம். இதுதான் தேர்தல் பிரச்சினையாக இருக்கும்.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். எங்கள் கட்சி நடத்திய ஆய்வு இதை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story