பட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து
பட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை எங்களால் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளிக்கு 2 மணி நேரமும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசுக்கேடு மற்றும் வாகனப்புகையால் உண்டாகும் மாசுக்கேடு குறித்து மத்திய அரசு ஒரு ஒப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வாகனப்புகையால் அதிக அளவு மாசுக்கேடு உண்டாகும் நிலையில் பட்டாசுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்களின் வேலையின்மையை தடுக்கும் வகையில் வழிமுறைகளை மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பாக நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது.
பட்டாசு தயாரிக்கும் தொழில் சட்டரீதியான தொழில். அதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பட்டாசு தொழிலுக்கே தடை விதிக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்? என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலர் பட்டாசுகள் சரியானவை அல்ல என்பதால், ஒரு பிரிவினர் பட்டினியால் வாடுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நிரூபணம் இல்லாத சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பட்டாசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையில் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த வழக்கை நாங்கள் மிகவும் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். வழக்கின் விசாரணை ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story