ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன


ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு:  30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன
x
தினத்தந்தி 13 March 2019 12:27 PM IST (Updated: 13 March 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் அங்குள்ள மார்க்கெட்  கடுமையாக சேதம் அடைந்தது. 

மார்க்கெட்டில் இருந்த 30 க்கும் மேற்பட்ட கடைகள் நிலச்சரிவில் சிக்கி புதைந்தன. இதையடுத்து, மீட்பு பணிகள் நடைபெற்று  வருகின்றன. உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 

அதிகாலை 4.30 மணியளவில் மிகப்பெரும் சத்தம் கேட்டதாகவும், அதைக்கேட்டு அச்சமடைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர். சிலர் நிலநடுக்கம் ஏற்பட்டது போல உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். சிலர் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


Next Story