பொதுமக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


பொதுமக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 March 2019 3:30 AM IST (Updated: 14 March 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

வாக்களிப்பது முக்கியமான கடமைகளில் ஒன்று. வாக்களிப்பதன் மூலம் நாட்டின் கனவுகள் மற்றும் உணர்வுகளில் மக்கள் தங்களை பிணைத்துக்கொள்கிறார்கள். எனவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்கும் வகையில் பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர். வாக்கின் வலிமை அவருக்கு தெரியும். எனவே, அவர் மக்களிடையே இதை வலியுறுத்த வேண்டும்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இதுபோல், நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர் கான், சல்மான் கான், மோகன்லால், நாகார்ஜூனா ஆகியோர் தங்களது நடிப்பின் மூலம் லட்சக்கணக்கானோரை மகிழ்வித்து வருகிறார்கள். நிறைய விருதுகளும் வென்று இருக்கிறார்கள். அவர்களும் மக்களிடையே வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிகம்பேர் வாக்களிப்பது நமது ஜனநாயகத்துக்கு நல்லது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Next Story