டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு


டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு
x
தினத்தந்தி 15 March 2019 3:30 AM IST (Updated: 15 March 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

நகரி,

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவில் முதல் கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்து உள்ளனர். மாநிலத்தில் இதுவரை எப்போதும் முதல் கட்ட தேர்தல் நடந்ததே இல்லை. இந்த முறை வேண்டுமென்றே முதல் கட்டத்தில் தேர்தல் வைத்து வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரத்தில் நான் பின்தங்கிவிடுவேன் என நினைத்தார்கள். ஆனால் எனது 40 ஆண்டு கால அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் தேர்வு கட்சி தொண்டர்களின் ஆதரவோடு நடந்து உள்ளது. பிரதமர் மோடி காவல்காரன் என்ற பெயரில் குற்றவாளிகளை கையில் வைத்துக்கொண்டு நாட்டை சுரண்ட ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

பிரதமர் மோடி, சந்திரசேகரராவ் உதவியுடன் ஜெகன்மோகன் ரெட்டியை தேர்தலில் வெற்றி பெற சதி திட்டம் தீட்டியுள்ளார். பா.ஜனதா கட்சிகள் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story