பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு


பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்தார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், அதன் வேட்பாளர்கள், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து டி.டி.வி.தினகரன், சசிகலாவிடம் பேசி ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு சிறைக்குள் சென்ற டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்து விட்டு மதியம் 1.40 மணியளவில் வெளியே வந்தார்.

Next Story