ஆந்திராவில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனசேனா கூட்டணி


ஆந்திராவில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனசேனா கூட்டணி
x
தினத்தந்தி 18 March 2019 1:00 AM IST (Updated: 18 March 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனசேனா கூட்டணி அமைத்தது.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு சித்தூர், திருப்பதி, பாபட்லா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளையும், 21 சட்டசபை தொகுதிகளையும் ஜனசேனா கட்சி ஒதுக்கி உள்ளது.

இதை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் நேற்று அறிவித்தார். அப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பிரதமராக பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

இந்த மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story