காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழப்பு, போலீஸ் விசாரணை


காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழப்பு, போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2019 4:03 PM IST (Updated: 19 March 2019 4:03 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் அசாத் பண்டிட்டை பயங்கரவாத தொடர்பு காரணமாக தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது. அவரை விசாரணை செய்துவந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவந்திபோரா இஸ்லாமிக் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

Next Story