தேசிய செய்திகள்

வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப் + "||" + India one of world's fastest growing large economies: IMF

வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்

வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கியமான சீர்திருத்தங்களை இந்தியா, மேற்கொண்டுள்ளதாகவும், இன்னும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

ஐ.எம்.எப் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ர்ரி ரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதில் அளித்த ரைஸ் மேற்கண்டவாறு கூறினார். மேலும், அவர் கூறும் போது, “ உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரி 7 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீடித்த மற்றும் உயர் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் இன்னும் அவசியம் என நாங்கள் கருதுகிறோம். 

இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய தகவல்கள் விரைவில்  வெளியிடப்படவிருக்கும், உலக பொருளாதார பார்வை (WEO) ஆய்வறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தால் அடுத்த மாதம் நடைபெறும் உலகவங்கியின் கூட்டத்தில் வெளியிடப்படும்” என்றார். 

தற்போது ஐ.எம்.எப் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் தலைமையில் வெளியிடப்படும் முதல் அறிக்கையாக இந்த அறிக்கை இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்
காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநித் கூறினார்.
2. இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகம்
இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக உணர்த்தி உள்ளார்.
3. ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுதலை
ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.
4. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
5. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.