காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 23 March 2019 1:18 PM GMT (Updated: 23 March 2019 1:18 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு,

இந்திய துணை ராணுவ படையினர் மீது ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது.  இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்பின் இந்திய விமான படையானது பாகிஸ்தானில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.  இதனை அடுத்து இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான் விமானத்தினை இந்திய விமான படையானது விரட்டி அடித்தது.

இந்த தொடர் சம்பவங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

Next Story