காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிப்பு; கொடி தலைகீழாக பறந்தது
காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த சண்டை இரு தரப்பிலும் நள்ளிரவிலும் தொடர்ந்தது. பாகிஸ்தானிய படைகள், இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தின.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் நகரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானிய படைகள் நடத்திய தாக்குதலில் அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ வீரர் ஹரி வேக்கர் என்பவருக்கு காயமேற்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
தொடர்ந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது. அதில், அந்நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது. இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவ வட்டாரம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story