பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிஎம்நரேந்திர மோடி எனும் பெயரில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வெளியிட தடைகோரி, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமன் பன்வார் என்பவர் மனு தொடுத்துள்ளார். இந்த மனுவை வரும் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
இந்த நிலையில், பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினமே இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் கிளையிலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த மனுக்களை அந்த 2 உயர்நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்து விட்டன
Related Tags :
Next Story






