ஸ்பீடு பிரேக்கர் மம்தா பானர்ஜி பயத்தில் ஓடுகிறார் பிரதமர் மோடி தாக்கு
ஸ்பீடு பிரேக்கர் மம்தா பானர்ஜி பயத்தில் ஓடுகிறார் என பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஸ்பீடு பிரேக்கர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகளை தடுக்கிறார். இப்போது மக்களின் எண்ணங்கள் மாறிவிட்டது என தெரிந்தும் அச்சத்தில் உள்ளார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கூட்டம் நடைபெறும் பகுதியில் தற்காலிக கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு பேரணிக்கு வருபவர்களை தடுக்க ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொள்கிறது எனவும் சாடியுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு தோல்வி அடைந்துவிடுவோம் என்பது தெரிந்துவிட்டது. எனவேதான் தன் மாநில அதிகாரிகளிடம் கோபத்தை காட்டுகிறார், தேர்தல் ஆணையத்திடமும் கோபத்தை காட்டுகிறார். மம்தாவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலையை பெற மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
Related Tags :
Next Story