மத ரீதியாக பிரசாரம்: மாயாவதிக்கு எதிராக தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா புகார்


மத ரீதியாக பிரசாரம்: மாயாவதிக்கு எதிராக தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா புகார்
x
தினத்தந்தி 8 April 2019 12:00 AM IST (Updated: 7 April 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

மத ரீதியாக பிரசாரம் செய்ததாக, மாயாவதிக்கு எதிராக தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.

லக்னோ,

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தின் தியோபந்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, ‘காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது. ஏனெனில் மாநிலத்தில் பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே கூட்டணி எங்கள் கூட்டணிதான்’ என பேசியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மாயாவதி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா புகார் அளித்து உள்ளது. மாயாவதியின் பேச்சால் வகுப்புவாத மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும் அது சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு தடையை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் பா.ஜனதாவினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி ஜே.பி.எஸ்.ரத்தோர், தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Next Story