மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு


மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு
x
தினத்தந்தி 8 April 2019 2:39 AM IST (Updated: 8 April 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக இருப்பவர் எஸ்.எஸ். அலுவாலியா. இந்தமுறை அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அலுவாலியா அதே மாநிலத்தில் உள்ள துர்காபூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அலுவாலியா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இந்த தொகுதியில் என்னை போட்டியிட அனுமதித்த பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது இளமைக் காலத்தை துர்காபூரில்தான் கழித்தேன். இந்த தொகுதி எனக்கு நன்கு பழக்கப்பட்டதுதான். இங்கு வசிக்கும் மக்களுக்கு நான் சேவையாற்ற விரும்புகிறேன்”. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பா.ஜனதா கட்சி சார்பில் இதுவரை 408 நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story