ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மாற்றம்: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஜல்பாய்குரி,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த சூழலில் ஆந்திர மாநில தலைமை செயலாளராக இருந்த அனில் சந்திர புனிதாவை தேர்தல் கமிஷன் கடந்த 5-ந்தேதி நீக்கியது. அவருக்கு பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியத்தை புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது.
இதைப்போல மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் பிதாநகர் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் சமீபத்தில் தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்டனர்.
ஆனால் மத்திய பா.ஜனதா அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டதாக கூறி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொந்தளித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் இது குறித்து கூறுகையில், ‘மாநில விவகாரங்களில் மத்திய அரசு ஏன் தலையிடுகிறது? ஆந்திர மாநில தலைமைச் செயலாளரை ஏன் நீக்கினீர்கள்? அப்படி கடைசி நேர மாறுதல்களில் உங்களுக்கு (மோடி) அதிக நாட்டம் இருக்கிறதென்றால், ஏன் உங்கள் மந்திரிசபை செயலாளரையோ அல்லது உள்துறை செயலாளரையோ நீக்கவில்லை?’ என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தனது மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய தேர்தல் கமிஷனுக்கு நேற்று முன்தினம் அவர் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் அவர், ‘மேற்கு வங்காளத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது, மிகுந்த தன்னிச்சையானது, தூண்டப்பெற்றது மற்றும் ஒருதலைபட்சமானது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல வங்காள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போதும், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் என்பது ஒரு அரசியல் சாசன அமைப்பு. அதன் மீது நான் ஆழ்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். தேர்தல் கமிஷன் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் மாநிலங்களில் பணியாற்றும் சில அதிகாரிகளை மாற்றுமாறு பா.ஜனதாவை சேர்ந்த சிலர் கேட்டுக்கொண்டால், உடனே அதை செயல்படுத்தி விடுகிறது. இதுதான் பிரச்சினை.
மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் திறமையான அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி மாற்றப்பட்டு இருக்கின்றனர். ஆந்திர போலீசின் முதல் நபர் மாற்றப்பட்டு இருக்கிறார். இது அவமதிப்பு இல்லையா? மத்திய அரசு, உள்துறை அமைச்சக செயலாளரைத்தான் முதலில் மாற்ற வேண்டும்.
ஒரு அதிகாரியை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டது என்றால், அது குறித்து மாநில அரசிடம் தெரிவித்து 3 நபர் குழு அமைக்க சொல்ல வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை தேர்தல் கமிஷன் பின்பற்றவில்லை. இந்த விஷயத்தில் பா.ஜனதா கூறுவதைத்தான் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்.
தேர்தல் கமிஷன் மறுப்பு
மாநில அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் கட்டளைப்படி தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது என்னும் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்துக்கு தேர்தல் துணை கமிஷனர் ஒருவர் பதில் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் கமிஷன் மேற்கொண்ட அதிகாரிகள் மாற்றத்தை ஒருதலைப்பட்சமானது எனவும், மத்தியில் ஆளுங்கட்சியின் கட்டளைப்படி நடத்தியதாகவும் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதன் நம்பகத்தன்மையை நிரூபிக்குமாறு கூறுவது சரியாகவும், கண்ணியமாகவும் இருக்காது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் மாநில அரசில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-ன்படி தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. கேரள ஐகோர்ட்டும், தனது தீர்ப்பு ஒன்றில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே இந்த பணியிட மாற்றங்கள் அனைத்தும் எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தேர்தல் கமிஷனின் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஜனநாயக தூண்கள் அனைத்தும் மோடி மற்றும் அமித்ஷாவினால் வாங்கப்பட்டு வருகிறது. இதனால் என்னை போன்ற சாதாரண மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறோம். இந்த போராட்டம் தொடர்ந்தால் ஏராளமான மக்கள் எங்கள் பக்கம் நின்று இத்தகைய சர்வாதிகாரத்தை எதிர்ப்பார்கள். அதை உங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
தேர்தல் கமிஷன் மறுப்பு
மாநில அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் கட்டளைப்படி தேர்தல் கமிஷன் நடந்து கொள்கிறது என்னும் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்துக்கு தேர்தல் துணை கமிஷனர் ஒருவர் பதில் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் கமிஷன் மேற்கொண்ட அதிகாரிகள் மாற்றத்தை ஒருதலைப்பட்சமானது எனவும், மத்தியில் ஆளுங்கட்சியின் கட்டளைப்படி நடத்தியதாகவும் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதன் நம்பகத்தன்மையை நிரூபிக்குமாறு கூறுவது சரியாகவும், கண்ணியமாகவும் இருக்காது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் மாநில அரசில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-ன்படி தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. கேரள ஐகோர்ட்டும், தனது தீர்ப்பு ஒன்றில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே இந்த பணியிட மாற்றங்கள் அனைத்தும் எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தேர்தல் கமிஷனின் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story