பிரதமர் மோடிக்கு பிரசாரம் செய்யும் டிவி சீரியல்கள், தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
பிரதமர் மோடிக்கு ஆதரவாக டிவி சீரியல்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடியின் பயோபிக் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக டிவி சீரியல்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரித்து மூன்று டிவி சீரியல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மூன்று டிவி சீரியல்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story