தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பிரதமர் மோடி மீது சத்தீஷ்கார் முதல்-மந்திரி புகார்


தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பிரதமர் மோடி மீது சத்தீஷ்கார் முதல்-மந்திரி புகார்
x
தினத்தந்தி 9 April 2019 12:00 AM IST (Updated: 8 April 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பிரதமர் மோடி மீது சத்தீஷ்கார் முதல்-மந்திரி புகார் அளித்துள்ளார்.

ராய்ப்பூர்,

பிரதமர் மோடி சத்தீஷ்கார் மாநிலம் பலோட் நகரில் கடந்த 6-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் ராணுவத்தின் பெயரை பயன்படுத்தியதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் நேற்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுப்ரத் சாகு அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார்.

அதில், துல்லிய தாக்குதல், விமான தாக்குதல், செயற்கைகோள் தகர்ப்பு சோதனை போன்ற தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களை பேசி, மோடி ஆதாயம் தேட முயன்றதாக பூபேஷ் பாகல் கூறியுள்ளார்.

Next Story