சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் : தேர்தல் கமிஷன் அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் அனைத்து முயற்சிகளும் எடுக்கும்’’ என்றார்.
அதாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சட்டமன்ற தொகுதி வாரியாக ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள 5 மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளும், யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் என்பதால் ஒரு தொகுதிக்கு 30 எந்திரங்களின் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
Related Tags :
Next Story