ஒடிசா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட மறுப்பு


ஒடிசா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட மறுப்பு
x
தினத்தந்தி 10 April 2019 4:45 AM IST (Updated: 10 April 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு 4–ம் கட்ட தேர்தல் 29–ந் தேதி நடக்கிறது.

புவனேசுவரம், 

பர்சானா, நிமாபாரா ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக சீதாகந்த் மோகபத்ரா, சத்யபிராத் பத்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முடியாது என நேற்று முன்தினம் இரவு திடீரென மறுத்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக அஜய் சமால், திலீப் நாயக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நேற்று கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே ஒடிசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 4 பேர் போட்டியிட மறுத்து விட்டது நினைவுகூரத்தக்கது.


Next Story