5 மாநிலங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதம்; தேர்தல் ஆணையம் தகவல்
முதற்கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 19ந்தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதன்பின் மே 23ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் வாக்கு பதிவு மையங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சில தொகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில், ஆந்திர பிரதேசத்தில் 6, அருணாசல பிரதேசத்தில் 5, பீகாரில் ஒன்று, மணிப்பூரில் 2 மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒன்று என மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story