தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 AM GMT (Updated: 16 April 2019 10:45 AM GMT)

தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனார். பிரசாரத்தில் விலங்குகளும் தப்பிக்கவில்லை. அவைகளும் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சத்தீஷ்கரில் காங்கிரசுக்கு ஆதரவாக எருமைகளில் பிரசார வாசகம் எழுதப்பட்டுள்ளது. எருமையொன்றில் “காங்கிரசை தேர்வு செய்யுங்கள். காங்கிரசுக்காக வாக்களியுங்கள்,” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் சின்னம் இடம்பெற்று இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்  வைரலாக பரவியது.

எருமைகளில் இடம்பெற்ற வாசகம் அனைவரையும் கவர்ந்தது. தேர்தல் ஆணையம், விலங்குகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி பேசுகையில், இதுபோன்ற பிரசாரத்திற்கு எங்களுடைய கட்சி அனுமதிக்காது, இதுபோன்ற பிரசாரத்தை மேற்கொண்டவரை கண்டுபிடிப்போம், புகார் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார். 

Next Story