ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை


ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை
x
தினத்தந்தி 18 April 2019 12:00 AM IST (Updated: 17 April 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில முதல்-மந்திரியும், பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக், ரூர்கேலாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியவுடன், அவரை அணுகிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஹெலிகாப்டரையும், உடைமைகளையும் சோதனையிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர், அவர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடியும் வரை, நவீன் பட்நாயக், ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்தார்.

Next Story