கணவனின் வக்கிர ஆசை: பாதிக்கப்பட்ட மனைவி புகாரால் 4 பேர் கைது


கணவனின் வக்கிர ஆசை: பாதிக்கப்பட்ட மனைவி புகாரால் 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2019 8:07 AM GMT (Updated: 2019-05-01T13:37:04+05:30)

கணவனின் வக்கிர ஆசையால் பாதிக்கப்பட்ட மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவனின் நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 ஆழப்புழா

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் காயங்குளம் காவல் சரகத்திற்கு  உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்  ஷபின் அவரது மனைவி சிந்து (32), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

ஷேர்சாட் ஆப் மூலமாக மனைவி மாற்றம் (wife swapping)  தொடர்பாக பலருடன் ஷபினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்படி பழகிய நண்பர்களுடன், மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிப்பது ஷபின் வாடிக்கையாக இருந்தது.

ஒருகட்டத்தில் பல ஆண்களுடன், சிந்துவை ஒரே நேரத்தில் உறவு கொள்ள வைத்துள்ளார் ஷபின். இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார் சிந்து. இது குறித்து காயங்குளம் காவல் நிலையத்தில் சிந்து புகார் அளித்தார். இந்த புகாரை பார்த்து போலீசார் முதலில் அதிர்ந்து போய்விட்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், ஷபின் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நால்வர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இருப்பினும், மாற்று உறவில் இவர்களது மனைவிகள் கைது செய்யப்படவில்லை.கைது செய்யப்பட்ட அனைவருமே 23 முதல் 38 வயதுக்கு உட்பட்ட  ஆண்கள்.

நடுத்தர குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்கள். கேரளாவில் இதுபோல சமூக ஊடகங்களை பயன்படுத்தி, மனைவியை  மாற்றி உறவு கொள்ளும் கலாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். இன்னும் பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

கைது செய்யப்பட்ட 4 பேரும்  காயங்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கிருஷ்ணாபுரம், காயங்குளம், வவ்வக்காவு, கேரளபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காயங்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஷரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story