பானி புயல்: மேற்கு வங்க கவர்னருடன் பிரதமர் மோடி பேச்சு


பானி புயல்: மேற்கு வங்க கவர்னருடன் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 4 May 2019 11:04 PM IST (Updated: 4 May 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

பானி புயல் பாதிப்புகள் குறித்து, மேற்கு வங்க கவர்னரிடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

வங்க கடலில் உருவான பானி புயல் நேற்று ஒடிசாவை தாக்கியது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்த இந்த புயல், பின்னர் வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்தது.

இந்த புயலால் மேற்கு வங்காளத்தின் மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாப்பூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பானி புயலை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் இன்று கேட்டறிந்தார். அப்போது அவர், மாநிலத்தை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

Next Story