கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை - கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி


கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை - கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி
x
தினத்தந்தி 5 May 2019 6:28 PM IST (Updated: 5 May 2019 6:28 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #HDKumaraswamy

பெங்களூரு,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான " நீட் " தேர்வு, இன்று நாடெங்கும் நடைபெற்றது.

நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், “ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் 7 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் வட கர்நாடகா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது

தேர்வு மையங்களின் கடைசி நேர மாற்றங்களும், சரியான தகவல் பரிமாற்றமின்மையும் இல்லாததால் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.



Next Story