காஷ்மீர் எல்லையில் குண்டு வெடித்து 2 ராணுவ வீரர்கள் காயம்


காஷ்மீர் எல்லையில் குண்டு வெடித்து 2 ராணுவ வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 5 May 2019 11:38 PM IST (Updated: 5 May 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் நடந்த குண்டு வெடிப்பில், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி வீரர்கள் முன்னேறியபோது அங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.

இதில் சிக்கிக்கொண்ட 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story