டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு சமாஜ்வாடி ஆதரவு
டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு சமாஜ்வாடி கட்சி தங்களது ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 5 இடங்களில் பகுஜன் சமாஜ் போட்டியிடுகிறது. ஆனால் சமாஜ்வாடி டெல்லியில் களமிறங்கவில்லை. இந்த 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், டெல்லியில் பகுஜன் சமாஜ் போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சியை ஆதரிப்பது என சமாஜ்வாடி முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அந்த கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
அதன்படி புதுடெல்லி, வடமேற்கு டெல்லி தொகுதிகளில் ஆம் ஆத்மியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வருகிற 12-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

Related Tags :
Next Story