தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Additional Protection Requests for Voting Machines - Dismissed in Supreme Court

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,

சென்னை மண்ணடியைச் சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் சட்ட சங்கத்தின் தலைவர் எம்.சீனிவாசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் கமிஷன் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக நிர்வாகத்துறையில் பணியாற்றிய 66 முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மனு அளித்து உள்ளனர். வாக்களித்த பிறகு மின்னணு எந்திரங்களில் முறைகேடுகளை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
2. வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு: இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பிறப்பித்துள்ளார்.
3. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திறக்கப்படாத 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்படவில்லை.
4. தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்ததை முகநூலில் வெளியிட்டவர் மீது வழக்கு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்ததை முகநூலில் வெளியிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. வாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் கலெக்டர் சாந்தா தகவல்
வாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.