தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: போராட்டம் நடத்திய 17 பெண்கள் கைது


தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: போராட்டம் நடத்திய 17 பெண்கள் கைது
x
தினத்தந்தி 9 May 2019 12:21 AM IST (Updated: 9 May 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக, போராட்டம் நடத்திய 17 பெண்கள் கைது செய்ய்ப்பட்டனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதை விசாரித்த 3 நீதிபதிகள் குழு, புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பு அளித்தது. இந்த விசாரணையில் பின்பற்றப்பட்ட அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி கன்னாட்பிளேஸ் மெட்ரோ ரெயில் நிலைய நுழைவாயிலில் நேற்று ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட அவர்கள், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story