தேசிய செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள் + "||" + Woman killed by in- laws for giving birth to twin baby girls

இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள்

இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள்
ஒடிசாவில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை கணவர் உள்ளிட்ட உறவினர்கள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கேந்திரபாரா,

ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் அம்பா பெலாரி கிராமம் உள்ளது.  இங்கு பந்தனா (வயது 25) என்ற இளம்பெண் தனது கணவர் போலாவுடன் வசித்து வந்துள்ளார்.  கர்ப்பிணியான அவருக்கு கடந்த வாரம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.  இந்நிலையில், நேற்று மதியம் பந்தனா தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி பந்தனாவின் தந்தை சித்தரஞ்சனிடம் அவரது கணவர் வீட்டினர் கூறியுள்ளனர்.  அதிர்ச்சி அடைந்து அங்கு சென்ற அவர், அமர்ந்த நிலையில் சேலையில் தூக்கிட்டபடி இருந்த தனது மகளை கண்டு அதிர்ந்துள்ளார்.

பந்தனாவின் மரணத்தில் சந்தேகமடைந்த சித்தரஞ்சன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில், தனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் இருந்த கள்ள தொடர்புக்கு பந்தனா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.  இதனால் அவரை போலா துன்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த வாரம் தனது மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.  இதனால் அவரது உறவினர்கள் தனது மகளை துன்புறுத்த தொடங்கியதுடன், பேர குழந்தைகளை கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

சிகிச்சைக்காக தாய் மற்றும் சேய் இருவரையும் இரு வாரங்கள் மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர் அறிவுரை கூறினார்.  ஆனால் அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.  இந்நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவலை கூறினர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பந்தனாவின் கணவர் போலாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை
சென்னை லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
3. குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி
திருவாரூர் அருகே குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் மனைவி அடித்து கொன்றார்.
4. சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்
சத்ருகன் சின்காவின் மனைவி சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
5. தொழிலாளி கொலை: விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, மகன் கைது
பல்லாவரத்தில், குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கீழே தள்ளி கொலை செய்து விட்டு, விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியதாக அவருடைய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...