“தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது” - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


“தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது” - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 13 May 2019 11:37 PM IST (Updated: 13 May 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (சி-டெட்), ஜூலை 7-ந் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது. இது முற்றிலும் தவறான எண்ணம். சி-டெட், வெறும் தகுதி தேர்வுதான். ஆசிரியர் சேர்க்கையின்போது மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும், என்றனர்.

Next Story