தேசிய செய்திகள்

மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி - காங்கிரஸ் வேட்பாளர் தகவல் + "||" + Swiss bank Rs 7 crore in his wife name - Congress candidate information

மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி - காங்கிரஸ் வேட்பாளர் தகவல்

மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி - காங்கிரஸ் வேட்பாளர் தகவல்
மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
குர்தாஸ்பூர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஒன்றான குர்தாஸ்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். அவர் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.


அதில், தனக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். தன் மனைவி சில்வியா பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.