தேசிய செய்திகள்

அரசு கல்லூரியில் சேர்க்க கோரி தமிழக மருத்துவ மாணவர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Demanding to join the state college the Supreme Court dismissed the appeal ordered for medical students in Tamil Nadu

அரசு கல்லூரியில் சேர்க்க கோரி தமிழக மருத்துவ மாணவர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசு கல்லூரியில் சேர்க்க கோரி தமிழக மருத்துவ மாணவர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசு கல்லூரியில் சேர்க்க கோரி தமிழக மருத்துவ மாணவர்களின் மேல்முறையீட்டு மனுவினை, தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

சென்னையில் உள்ள பொன்னையா ராமஜெயம் தனியார் மருத்துவ கல்லூரியில் முறையான கட்டமைப்பு வசதி இல்லாததால் அதை மூட இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த 103 மருத்துவ மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


இதையடுத்து அந்த மாணவர்களை 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தங்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என கோரினர். அரசு கல்லூரியில் அந்த மாணவர்களை சேர்க்க இயலாது என தமிழக அரசு கூறியதால், சென்னை ஐகோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்றும், ஐகோர்ட்டு உத்தரவையே செயல்படுத்துமாறு உத்தரவிட்டு மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...