தேர்தல் செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு + "||" + Uttar Pradesh Lok Sabha Election Results 2019 Live: BJP leading; SP-BSP alliance lags behind

உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு
உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
லக்னோ,

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின் படி,  பாரதீய ஜனதா 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மெகா கூட்டணி என போட்டியிட்டன.

மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அமேதி தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றுள்ளார்.