தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவு + "||" + Karnataka Election Result 2019 LIVE: Congress's Mallikarjun Kharge trailing

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவு

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவு
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவை சந்தித்துள்ளார்.
குல்பர்கா,

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் உமேஷ் ஜி.ஜாதவ் போட்டியிட்டார். இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பின் தங்கியுள்ளார்.