டெல்லியில் பிரதமர் மோடி இன்று மாலை பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார்


டெல்லியில் பிரதமர் மோடி இன்று மாலை பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 23 May 2019 1:07 PM IST (Updated: 23 May 2019 1:07 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி இன்று மாலை 5.30 மணியளவில் பா.ஜ.க. தொண்டர்களை சந்திக்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  இதன்பின் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது.  தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இதனால் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதியம் 2 மணியளவில் செல்கிறார்.  இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார்.

அக்கட்சியின் 20 ஆயிரம் தொண்டர்களை டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது.  தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றியதற்காக மூத்த மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.  பா.ஜ.க.வின் நாடாளுமன்ற வாரிய கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.
1 More update

Next Story