தேர்தல் செய்திகள்

பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து + "||" + Prime Minister of Israel, Benjamin Netanyahu congratulates Prime Minister #NarendraModi

பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 334 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.