கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை, பா.ஜனதாவிற்கு ஏமாற்றம்


கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை, பா.ஜனதாவிற்கு ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 May 2019 2:07 PM IST (Updated: 23 May 2019 2:07 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சபரிமலை விவகாரத்தை பெரிதும் எதிர்பார்த்த பா.ஜனதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.  மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும், பா.ஜனதா கூட்டணியும் என மும்முனைப் போட்டி நிலவியது. மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் பா.ஜனதா அதனை வெளிப்படையாகவே மீறியது. மாநிலத்தில் சபரிமலை விவகாரம் மிகவும் கைக்கொடுக்கும் என பார்த்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் முன்னிலைப் பெற்றுள்ளார்.
1 More update

Next Story