மேற்கு வங்காளத்தில் ஒரேஒரு இடதுசாரி வேட்பாளர் மட்டும் டெபாசிட் வாங்கினார்


மேற்கு வங்காளத்தில் ஒரேஒரு இடதுசாரி வேட்பாளர் மட்டும் டெபாசிட் வாங்கினார்
x
தினத்தந்தி 24 May 2019 7:01 PM IST (Updated: 24 May 2019 7:01 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் ஒரேஒரு இடதுசாரி வேட்பாளர் மட்டும் டெபாசிட் வாங்கியுள்ளார்.

2019 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 18 இடங்களையும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும் பிடித்தது. அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிப்பெறவில்லை. மாநிலத்தில் இடதுசாரிகளின் வாக்கு வங்கி 34 சதவீதத்தில் இருந்து வெறும் 6.28 சதவீதமாக குறைந்துள்ளது. போட்டி திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும்தான் என்றாகிவிட்டது.  

2011-ம் ஆண்டு 34 வருட இடதுசாரிகள் அரசை மம்தா பானர்ஜி மாநிலத்தில் நீக்கினார். இதன்பின்னர் இடதுசாரிகளுக்கு இறங்கு முகம்தான். இப்போது பா.ஜனதாவால் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. 

இடதுசாரிகள் தரப்பில் 42 தொகுதிகளில் வேட்பாளர் இறக்கப்பட்டாலும் ஒரேஒரு வேட்பாளர் மட்டுமே டெபாசிட் பெற்றுள்ளார். மற்றவர்கள் யாரும் டெபாசிட் பெறவில்லை. ஒருதொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கட்டும் டெபாசிட் தொகையான ரூ. 25 ஆயிரத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் 16 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். மேற்கு வங்காளத்தில் ஜாதாவ்பூரில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவை தவிர்த்து வேறு எந்தஒரு இடதுசாரி வேட்பாளரும் 16 சதவீத வாக்குகளை பெறவில்லை. ரஞ்சன் பட்டாச்சார்யா மட்டும் டெபாசிட்டை பெற்றுள்ளார். 
1 More update

Next Story