பா.ஜனதா, அசாம் கண பரிஷத் சார்பில் அசாமில் 2 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு


பா.ஜனதா, அசாம் கண பரிஷத் சார்பில் அசாமில் 2 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 1 Jun 2019 2:35 AM IST (Updated: 1 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா, அசாம் கண பரிஷத் சார்பில் அசாமில் 2 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 2 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அவற்றை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. காமாக்ய பிரசாத் தஸ்சாவும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி வீரேந்திர பிரசாத் பைஷ்யாவும் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள் ஆகும். வேறு யாரும் மனு செய்யாததால், 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story