அமித்ஷா மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை


அமித்ஷா மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Jun 2019 3:30 AM IST (Updated: 5 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

கச்சா எண்ணெய் இறக்குமதியில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட அமித்ஷா, நேற்று தனது அலுவலகத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், பெட்ரோலியம் மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது ஆகிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story